வடக்கு – தெற்கு ஊடகங்கள் தேசிய நல்லிணக்கத்திற்கு உறுதியாக உழைக்கின்றன! அமைச்சர் கஜந்த கருணாதிலக்க

Sunday, March 27th, 2016

வடக்கு- தெற்கு ஊடகங்கள் தேசிய இன நல்லிணக்கத்திற்கு உறுதியான பங்களிப்பை செய்து வருவதாக ஊடகத்து கை அமைச்சர் கஜந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேண்கொண்டிருந்த ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக ஆளுநரை சந்தித்த பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வாருங்கள் ஒன்றாய் சுவாசிக்க’ என்ற தொனிப்பொருளில் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெற்கு ஊடகவியலாளர்களுடன் நேற்று யாழ்ப்பாணம் வந்தடைந்தார். அவரின் இந்தப் பயணம் 15 வருடங்களின் பின்னர் ஊடக அமைச்சர் ஒருவரின் யாழ்ப்பாணத்துக்கான பயணமாக அமைந்தது.

புகையிரதம் மூலம் யாழ்ப்பாணம் வந்த அமைச்சருடன் குருணாகல், அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர்களும் யாழ்ப்பாணம் வந்தனர். இவர்களை வடக்கு ஊடகவியலாளர்கள் ரயில் நிலையத்தில் வரவேற்றனர்.

யாழ்ப்பாணம் வந்த அமைச்சர் ஆளுநர் அலுவலகத்துக்கு சென்று ஆளுநர் றெஜினோல்ட் கூரேயை சந்தித்து தெற்கைப் போன்று வடக்கிலும் ஊடக சுதந்திரத்தை வலுப்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தினார்..

இன்று ஞாயிற்றுக்கிழமை வடக்கில் ஊடகப் பணி செய்து கொண்டிருந்த போது இறந்த, காணாமல் போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் நிகழ்வில் ஊடக அமைச்சர் பங்கேற்பார். இதன்போது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உதவித் திட்டங்களையும் வழங்கி வைப்பார்.

நாளை திங்கட்கிழமை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: