மத்திய வங்கி பிணைமுறி விவகாரம்: ஆணைக்குழு நியமிக்க ஆலோசனை !

Monday, January 23rd, 2017

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றிய புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு, அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவால், சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர், மேல் நீதிமன்ற நீதியரசர்; மற்றும் கணக்காய்வு நிபுணர் ஆகியோரை உள்ளடக்கிய மூன்று பேர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல், இந்த வாரம் வெளியிடப்படவுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் விதந்துரைகளுடனான அறிக்கை மூன்று மாதத்தினுள் நிறைவுசெய்யப்படும். ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வெற்றிபெறுவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

maithripala

Related posts: