கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் தாக்கம் குறைவு!

Wednesday, February 1st, 2017

கோப்பாய் வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் டெங்கு நோய் தாக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதாக சுகாதாரப் பகுதியினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது சுகாதாரப் பகுதியினர் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக இதன் தாக்கம் இப்பிரிவில் தற்காலிகமாகக் குறைவடைந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, சுற்றச்சூழல் பொலிஸ், பிரதேச செயலகம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் இணைந்து கோப்பாய் பிரிவில் உள்ள பல பகுதிகளிலும் காணப்படுகின்ற விடுகள், காணிகள், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் போன்றவற்றில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த சிலர் எச்சரிக்கை செய்யப்பட்டதோடு சிலர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை உரும்பிராய் தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் சுகாதாரப் பகுதியினரால் டெங்கு எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் வீடுகள் தரிசிப்பும், பொதுமக்களுக்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதில் சுகாதாரப் பகுதியைச் சேர்ந்த பல உத்தியோகத்தர்களும் பொலிஸாரும் இணைந்திருந்தனர்.

dengue-page-upload-1

Related posts: