யாழ்ப்பாண மாவட்டத்தில் 20 சதவீதமானவர்களுக்கு நீரழிவு நோய் தொற்று – நீரழிவு சிகிச்சைப்பிரிவின் நிபுணர்.அரவிந்தன் தெரிவிப்பு!

Tuesday, November 14th, 2023

யாழ்ப்பாண மாவட்டத்தில் 20 சதவீதமானவர்களுக்கு நீரழிவு நோய் தொற்று  உள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரழிவு சிகிச்சைப்பிரிவின் நிபுணர் கலாநிதி R.T.அரவிந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட நீரழிவு கழகம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகியவற்றின்  எற்பாட்டில்  உலக நீரழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும் நடமாடும் இலவச பரிசோதனை சேவை இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையின் வெளி நோயாளர் சிகிச்சைப்பிரிவில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரழிவு சிகிச்சைப்பிரிவின் நிபுணர் கலாநிதி R.T.அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு வருடங்களாக  கொரோனா தொற்றுகாலத்தில் இளைஞர்கள் மட்டத்தில் நீரழிவு நோய் அதிகரித்து காணப்பட்டுள்ளது.

இதில் தற்போது 35,000 மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். நீரழிவை முற்றாக குணப்படுத்துவோம் என்றும் நீரழிவால் பேரழிவு வேண்டாம் என்றும் அவர்  குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் யமுனாந்தா கலந்து கொண்டு நடமாடும் இலவச பரிசோதனை சேவையினை ஆரம்பித்துவைத்தார்.

இதில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதவிநிலை வைத்தியர்கள், நீரழிவு சிகிச்சைப்பிரிவின் வைத்திய குழாமினார்கள், மருத்துவபீட மாணவர்கள், யாழ்ப்பாண மாவட்ட நீரழிவு கழகத்தின் தலைவர் மைக்கல் டெபோட் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts: