மின் கட்டணம் தொடர்பில் புதிய நடைமுறை : மின்சாரத்தை சிக்கரமான பயன்படுத்துங்கள் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

மின்சாரம் பயன்படுத்தப்படும் அலகுகளுக்கு மாத்திரமே மின் கட்டணம் அறிவிடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டண பட்டியலில் எந்தவிதமான மேலதிக கட்டணங்களோ அல்லது உதிரியான கட்டணங்களோ அறவிடப்படாது என்பதுடன் மின்கட்டணத்திற்கான சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட மாட்டாது எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் அதிக மின்கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சம் பொது மக்களுக்கு தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளதுடன் மின் கட்டணத்திற்கான பட்டியல் கிடைக்கப் பெற்றவுடன் விரைந்து செலுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பாவனையாளர்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தாவிட்டால் மின் நுகர்வு அதிகரிக்கக்கூடும் என்றும் குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தேசிய மின் நுகர்வு 30 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது என்று மின்வலு மற்றும் சக்திவலு அமைச்சு அறிவித்துள்ளது. அதனால் பாவனையாளர்கள் அனைவரும் மின்சாரம் வீணாவதைத் தடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது தேசிய மின் தேவையில் சுமார் 15 சதவீதம் நீர் மின் உற்பத்தியால் வழங்கப்படுகிறது. எவ்வாறாயினும், முக்கிய விவசாய நோக்கங்களுக்காகத் தேவையான நீரை விடுவிப்பதன் காரணமாக நீர்மின் உற்பத்தி ஓரளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Related posts:
|
|