கிடைக்கப்பெற்றஅரசியல் பலத்திற்கு ஊடாகவே மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்க முடிந்தது–டக்ளஸ் தேவானந்தா

Friday, March 25th, 2016

கடந்த காலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் பலத்திற்கு ஊடாக எமது மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களையும் அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடிந்தது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது…

கடந்தகாலங்களில் நாம் எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டின் காரணமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தப்படவேண்டிய அதேவேளை அழிவடைந்த பகுதிகளையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்பட வேண்டிய தலையாய பொறுப்பாகவும் இருந்தது.

அதன் அடிப்படையில் கிடைக்கபெற்ற அரசியல் பலத்திற்கு ஊடாக முடிந்தளவிற்கு மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களையும் அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடிந்துள்ளது.

வடமாகாணதேர்தலுக்குமுன்பதாக அரசிடமிருந்து கிடைக்கப்பெற்ற நிதிகளைக் கொண்டு மக்களுக்கான தேவைகளை இனங்கண்டு அப்போதைய ஆளுனருடன் இணைந்து பல்வேறுபட்ட மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களையும் அபிவிருத்திகளையும் முன்னெடுத்தது மட்டுமன்றி மேலதிகமாக விசேட நிதிகளைப் பெற்றுக் கொண்டும் மக்கள் சேவைகளையும் முன்னெடுத்துள்ளோம்.

இணக்க அரசியலினுடாகவும் அரசுடனான நல்லுறவினூடாகவும் இப்பேற்பட்ட செயற்றிட்டங்களையெல்லாம் நாம் முன்னெடுத்தபொழுதுகளில் தமது அரசியல் சுயலாபங்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எம்மை விமர்சித்ததுமட்டுமன்றி விசமத்தனமான பிரசாரங்களையும் முன்னெடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வடக்குமாகாணசபையை தம்வசம் வைத்திருக்கும் கூட்டமைப்பினர் செயற்படுத்தக் கூடியதானமக்கள் நலன்சார்ந்த பல்வேறு செயற்றிட்டங்களை செயற்படுத்துவதில் அக்கறையற்றும் ஆற்றலற்றும் இருக்கின்றமை வேதனையளிப்பதாகவும் உள்ளது.

குறிப்பாக வடக்குமாகாணசபைக்கென வழங்கப்பட்ட நிதியினைக் கொண்டு மக்களுக்காக செய்யப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திசெயற்றிட்டங்கள் இருக்கின்றபோதிலும் அவற்றை செயற்படுத்தாமல் அந்நிதிமீளவும் திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்தான் வடக்குமாகாணசபையை நாம் கைப்பற்றும் பட்சத்தில்  மூன்று தொடக்கம் ஐந்து வருடங்களில் வடக்குமாகாணத்தை வளமானதொரு தேசமாகமாற்றியமைக்கும் அதேவேளை பாலும் தேனும் ஓடவைக்க முடியுமென்று தேர்தல்பிரசாரங்களின் போது உறுதிபடத் தெரிவித்திருந்தோம் என தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா. மக்கள் எமக்கு அரசியல் பலத்தை தந்திருப்பார்களேயானால் நாம் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நறைவேற்றியிருப்போம் என்று தெரிவித்ததுடன் நாம் தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்போடு மக்களுக்காக உழைப்பதற்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

Related posts:


மக்களுக்கான  சேவையை நான் இதயசுத்தியுடன் செய்திருக்கிறேன் - முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!
வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் கட்டாயமில்லை - சுகாதார பணிப்பாளர் நாயகம...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து - சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பா...