மாணவி வித்தியா கொலை: 12 ஆவது சந்தேக நபராக முதியவர் கைது!

Friday, April 1st, 2016

மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 ஆவது சந்தேக நபராக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

வித்தியா கொலை வழக்கின் அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்டுள்ள 11 ஆவது சந்தேக நபருடைய வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் சபேசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த வழக்கில் புதிதாக கைது செய்யப்பட்ட புங்குடுதீவுப் பகுதியினைச் சேர்ந்த முதியவர் ஒருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டிருந்தார். இருப்பினும் அவரை கைது செய்யத குற்றப் புலனாய்வு பிரிவினர் மன்றில் தோன்றியிருக்கவில்லை. வழக்கினை ஊர்காவற்றுறை பொலிஸாரே கொண்டு நடாத்தியிருந்தனர்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி செவ்வாக்கிழமை வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்

Related posts: