அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் – 20-25 பேர் கொண்ட அமைச்சரவை – இளம் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பாரப்பு!

Thursday, July 21st, 2022

இன்று பதவியேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் பணியாற்றுவதற்கு 20-25 பேர் கொண்ட அமைச்சரவை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது

இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தில் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் .அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கின்றது

எதிர்க்கட்சியிலிருந்து எந்தத் தலைவரும் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இல்லை என்றால், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும்.

அரசியலமைப்பின் படி, அமைச்சரவையின் அளவு 30 ஐ தாண்டக்கூடாது. எனவே 20-25 பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படும்.

மேலும் புதிய அரசாங்கம் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் மற்றும் விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்கான உரங்களை வழங்குதல் ஆகியவை குறித்து கவனம் செலுத்தும் .

மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட நிதி உதவியைப் பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அரசாங்கம் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தகட்கது

000

Related posts: