குடிவரவு – குடியகல்வு பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை!
Saturday, February 2nd, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு – குடியகல்வு பணிகள் தாமதமடைவதைத் தடுப்பதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய குடிவரவு – குடியகல்வு மற்றும் சுங்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் வழிநடத்த விமான நிலையத்தில் பல்வேறு நிலையங்களை அமைப்பதற்கும் அறிவிப்புப்பலகை, வர்ண சமிக்ஞைகளை தேவையான இடங்களில் பொருத்தவும் அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அறிவுரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் விமான நிலையத்தில் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு பயணிகளுக்கு அதிகம் வசதிகளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அமைச்சுத் தெரிவித்துள்ளது.
Related posts:
அதிபர் போட்டிப் பரீட்சை - வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதா?
இலங்கை கிரிகெட் அணியின் ஆரோக்கியத்தை மனதிற்கொண்டு பயிற்றுவிப்பாளரை தேடும் இலங்கை கிரிக்கெட் சபை !
கிழக்கு கடலில் கொந்தளிப்பு - எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கு சாத்தியம...
|
|
|


