தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவு!
Saturday, December 8th, 2018
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த வாரத்தில் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பெறுபேறுகள் கல்வி அமைச்சு மற்றும் பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள்பரிசீலனைக்கு 20,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
பெரும் கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் - விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பமான வானிலை நிலவும் - வளிமண்டலவியல் திணைக...
மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற வயோதிப பெண் கீழே விழ்ந்து மரணம்!
|
|
|


