நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பமான வானிலை நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
Wednesday, February 19th, 2025
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பமான வானிலை நிலவக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை பதிவாகக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பணியிடங்களில் இருக்கும் போது அதிக நீரைப் பருகுமாறும் வீடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் வாகனங்களுக்குள் சிறுவர்களை விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Related posts:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வவுச்சர்கள்!
ஈ.பி.டி.பி ஆதரவுடன் யாழ் மாநகரின் புதிய முதல்வராக மணிவண்ணன் தெரிவானார்!
சட்டவிரோதமாக குடியேறிய எவரும் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் – அவுஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு!
|
|
|


