எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!
Monday, March 25th, 2019
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த 11 இந்திய மீனவர்களை நேற்று (24) அதிகாலை காங்கேசன்துறை கடற்படையினர் அனலைதீவு கடற்பரப்பில் கைதுசெய்துள்ளதுடன் மாலை யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளின் மூலமாக இராமேஸ்வரத்தில் இருந்து வருகை தந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உடமைகள் என்பன அரசயுடமைக்கயாக்கபட்டுள்ளது.
மீனவர்களை ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஏ.யுட்சனினுடைய வாசஸ்தலத்திற்கு அழைத்து சென்றபோது அவர்களை எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
2016 – 2017 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல் வெளியாகின்!
கட்டாருடன் இலங்கை 07 உடன்படிக்கைகளில் கைச்சாத்து!
புகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம் - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
|
|
|


