நாட்டில் மீண்டும் ‘டெங்கு’ அபாயம் – சுகாதார பிரிவினர் கடும் எச்சரக்கை!

Thursday, October 21st, 2021

நாட்டில் டெங்கு நோய் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரக்கை விடுத்துள்ளனர்.

டெங்கு காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் கமல் ஏ பெரேரா தெரிவித்துள்ளார்.

டெங்கு நுளம்புகள் மீண்டும் உருவாவதற்கான முக்கிய காரணம் இடைக்கிடை பெய்யும் மழையே, என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வீட்டுச் சூழலில் டெங்கு நுளம்பு உருவாக்கக்கூடிய இடங்களை துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: