வேறுபடுத்தப்படாத குப்பைகளை சேகரிக்காதிருக்க முடிவு!

Thursday, September 29th, 2016

நவம்பர் முதலாம் திகதி முதல் வேறுபடுத்தப்படாத நிலையில் காணப்படும் குப்பைகளை சேகரிக்கப் போவதில்லை என மாநகர சபைகள் தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்

அமைச்சர் தலைமையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு வீடுகள், நிறுவனங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் அனைத்திற்கும் பொருந்தும் என அவர் கூறியுள்ளார்.

கழிவுகளை சிதையும் கழிவுகள், சிதையாத கழிவுகள், பிளாஸ்டிக், கண்ணாடிக் கழிவுகள் என வேறுபடுத்த வேண்டும் என குறிப்பிட்ட பைசர் முஸ்தபா, ஒழுங்கற்ற முறையில் கழிவுகள் அகற்றப்படுவதால் மாநகர சபை பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

141797386622

Related posts: