பொலிஸார் மீது வாள்வெட்டு: ஊர்காவற்றுறையில் சம்பவம்!

Saturday, May 5th, 2018

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாரந்தனைப் பகுதியில் வைத்து வாள்வெட்டுக்குள்ளானார் என தெரிவிக்கப்படுகின்றது.

வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே  குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது இன்று முற்பகல் வாள்வெட்டு  நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரே, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தினார்” என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related posts: