பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் – வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் கேசவன் கோரிக்கை!

Wednesday, September 9th, 2020

யாழ்ப்பாணத்தில் பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் என வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் கேசவன் கோரிக்கை விடுத்துள்ளார்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தில் உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடாபில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் –

வட மாகாணத்திலும் 3 வருடமாக இந்த கழிவகற்றல் விடயம் தொடர்பில் பேசி வருகின்றோம். ஆரம்பத்தில் இருந்து இந்த விடயங்களை மீளபார்க்க முடியாது ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலகத்தினர், உள்ளூராட்சி மன்றத்தினர் இணைந்து தங்களுடைய பிரதேசங்களில் அதாவது உதாரணமாக யாழ்ப்பாண மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதேபோல் நல்லூர் கோப்பாய் போன்ற பிரதேசங்களில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க தயாராக வேண்டும் அதாவது எங்கிருந்து குப்பைகள் கொட்டப்படுகின்றன அதனை முதலில் அடையாளப்படுத்துங்கள். அதனை அடையாளம் கண்டு விட்டு உடனடியாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசாரின் உதவியுடன் அவர்களை கைது செய்யுங்கள்.

அப்படியானவர்களை இலகுவாக கைது செய்ய முடியும். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பார்கள்.  பொலித்தீன் மற்றும் இதரகழிவுகளில் மட்டும் தான் இந்த டெங்கு பரவக் கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது.

ஒவ்வொரு கிழமையும் இந்த வேலைத் திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும் ஒவ்வொரு கிழமையும் செய்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts: