உயிரை பறிக்கும் இயர்போன்கள் : 6 மாதங்களில் 224 பேர் உயிரிழப்பு!

Tuesday, July 12th, 2016

காதுகளில் ” இயர்போன் ” மாட்டிக் கொண்டு புகையிரதப் பாதையில் பயணித்தவர்களே பெருமளவில் கடந்த காலங்களில ரயில்களில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக புகையிரதப் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடத்தில் இது வரையில் ரயில்களில் மோதுண்டு  244 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக புகையிரதப் பாதுகாப்பு பிரிவினர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கடந்த வாரத்தில் மாத்திரம் 13 ரயிலில் மோதுண்டு  உயிரிழந்துள்ளனர். பெருமளவில் காதுகளில் இயர்போன் மாட்டிக் கொண்டு புகையிரத பாதையில் நடந்து செல்வோரே பெருமளவில்   உயிரிழந்துள்ளனர். அத்தோடு மரணமடைந்தவர்களில் தற்கொலை கொண்டோரும் உள்ளடங்குகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

கடற்கரையோர புகையிரத மார்க்கத்தில் மொறட்டுவை மற்றும் வெள்ளவத்தைக்கு இடையிலேயே அதிகளவில் விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புகையிரத பாதுகாப்பு சேவை அதிகாரி அநுர பிரேமரத்ன,

இந்த விபத்துக்களை தடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மொறட்டுவை, வெள்ளவத்தைக்கு இடையேயான புகையிரதப் பாதைக்கு இடையே பாதுகாப்பு வேலியொன்று அமைப்பது தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ரயில் விபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் மக்களை                  தெளிவுபடுத்தும் இருவார பாதுகாப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. புகையிரத கட்டளைச் சட்டத்திற்கமைய ரயில் பாதையில் நடந்து செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: