எகிப்தில் ஐ.நா. பொதுச் செயலாளரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Monday, November 7th, 2022

எகிப்தின் கெய்ரோவைச் சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை சந்திததுள்ளார்.

இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார்.

இதன் போது 1978 இல் இலங்கைக்கான தனது முதலாவது விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம், ஜனாதிபதியிடம் நினைவுகூர்ந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கோப் – 27 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி நேற்றுக் (06) காலை எகிப்து பயணமானார்.

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொலம்பகே மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் சென்ட்ரா பெரேரா ஆகியோரும் ஜனாதிபதியுடன் எகிப்து சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.

000

Related posts: