ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரான்ஸ் கிளையினரால் முல்லைத்தீவில் விளையாட்டுக் கழத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Saturday, April 20th, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரான்ஸ் கிளையின் ஏற்பாட்டில் கட்சி பிரான்ஸ் கிளை உப அமைபாளர் சிறிகரன் (தோழர் டேவிட்) அவர்களால் துணுக்காய் லக்கிஸ்ரார் விளையாட்டு கழகத்துக்கு ஒரு தொகுதி கிரிகட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் ஜெயராஜ் கிருபன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க  குறித்த உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த உதவித்திட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் தயந்தன் மற்றும் குமணன் ஆகியோரால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த உதவித்திட்டமானது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்ளது எண்ணக்கருவான புலம்பெயர் தேச உறவுகள் தாயகத்தில் வாழும் மக்களது வாழ்வியலை முன்னேற்ற உதவிக்கரம் நீட்டவேண்டும் என்ற சிந்தனைக்கமைய கட்சியின் பிரான் கிளையினரால் மேற்கொள்ளப்பட்ட வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: