புகையிரதம் மீது கல்வீச்சு : ஒருவர் பலி!

புகையிரத பயணத்தின் போது எறியப்பட்ட கல்லால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுர போதனா வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் நேற்று(7) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேலையின் நிமிர்த்தம் கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபர் மீது வனவாசல – களனி புகையிரத நிலையங்களுக்கு இடையில் கல்வீச்சு தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில், அநுராதபுரம் புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 49 வயது நிரம்பிய உதவி கல்வி இயக்குனரே உயிரிழந்துள்ளார்.
Related posts:
சைட்டம் விவகாரம்: தொடர்ந்தும் மருத்துவ சபை பிடிவாதம் - லக்ஸ்மன் கிரியெல்ல!
கடந்த 24 மணி நேரத்தில் 42 கொவிட் மரணங்கள் - நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1400 ஐ கடந்தது!
ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!
|
|