சுற்றுலாத்துறையில் வருமானம் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டு!

Monday, December 5th, 2022

இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 1129.4 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தரவு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

நவம்பர் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 107.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

நவம்பர் மாதத்தில் 59,759 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர், இது ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 42 வீத அதிகரிப்பாகும். இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் 628,017 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

நவம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் தினசரி சராசரி 1991 ஆக இருந்தது, இது அக்டோபர் மாதத்தில் 1355 சுற்றுலாப் பயணிகளின் தினசரி வருகையுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.

2021 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் 104,989 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர், மேலும் இலங்கைக்கு கிடைத்த வருமானம் 273.6 மில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: