பண்டிகை காலத்தை முன்னிட்டு மீண்டும் பயணத்தடைகளை அமுல்படுத்துவது தொடர்பில் தீவிர ஆலோசனை!

Sunday, December 12th, 2021

பண்டிகைக் காலங்களில் நாடு முடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் அரசாங்கம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டை முடக்காமல் பயணத்தடைகளை மாத்திரம் அமுல்படுத்தும் யோசனையை சுகாதார பிரிவு முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் விதமாக இவ்வாறு பயணத்தடையை அல்லது முடக்கத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். இந்தநிலையில், இந்த வைரஸ் பரவலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இந்த பொது முடக்கம் இருக்குமென கருதப்படுகிறது.

இதேவேளை, நாளொன்றுக்கு 700 இற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: