மீண்டும் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை!

Sunday, March 18th, 2018

2019 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்களுக்கு பதிலாக மீண்டும் சீருடைத் துணிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாசதெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் மக்கள் தொடர்ந்தும் விடுத்து வரும் கோரிக்கையை அடுத்தே எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு சீருடைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் பெரும் மோசடிகள் இடம்பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்குவந்த பின்னர் சீருடைக்கு பதிலாக வவுச்சர் முறையை அறிமுகப்படுத்தியது.

இந்த வவுச்சர் முறையின் மூலம் சீருடை துணிகளை கொள்வனவு செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பெற்றோர் தெரிவித்ததையடுத்து மீண்டும் பழைய முறையைநடைமுறைப்படுத்த கல்வியமைச்சு முடிவு செய்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாச ஆரம்பித்தவர்என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: