தீவகத்தின் வீதிகளை காப்பெற் வீதியாக தரமுயர்த்தும் செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விஷேட பிரதிநிதிகளால் வீதிகளுக்கான அடிக்கற்கள் நாட்டிவைப்பு!

Sunday, November 29th, 2020

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தை மையப்படுத்தியதான நாடுதழுவிய ரீதியான அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமான 1 இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக கிராமிய வீதிகளை காப்பெற் வீதியாக மாற்றும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தீவகத்தில் பல வீதிகளை காப்பெற் வீதிகளாக மாற்றுவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்மொழிவுகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட வீதிகளுக்கான அங்குரார்ப்பணம் இன்றையதினம் நடைபெற்றது.

ஆழுமைமிக்க ஜனாதிபதியின் தலைமையின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலின் மூலம் நாடு தழுவிய ரீதியில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இன்றையதினம் யாழ் மாவட்டத்தின் தீவக பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதியாக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் அவர்களால் நாட்டிவைக்கப்பட்டது.

இதற்கமைய தீவகத்தின் வேலணை ஊர்காவற்றுறை நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களில் மக்களின் அவசிய  தவைகருதியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்மொழியப்பட்ட வேலணை கந்தன்கடவை வீதி, ஊர்காவற்றுறை சூரியாவத்தை அண்ணா வீதி மற்றும் நெடுந்தீவின்  பிரதான வீதி ஆகியவற்றுக்கான அடிக்கற்கள் இன்றையதினம் நாட்டிவைக்கப்பட்டு குறித்த காப்பெற் வீதித் திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி, ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் ஜெயகாந்தன், நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் சசிகரன் குறித்த பிரதேச சபைகளின் துறைசார் அதிகாரிகள் கிராம சேவகர்கள் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், அப்பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: