உணவு தட்டுபாட்டை நிவர்த்திக்க 11 ஆயிரம் தரிசு வயல் நிலங்களில் மீண்டும் பயிர்ச் செய்கை – இராஜாங்க அமைச்ச்ர் மொஹான் பீ. டி. சில்வா தெரிவிப்பு!

Saturday, August 5th, 2023

எதிர்காலத்தில், உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமாயின், அதனை எதிர்கொள்ளும் வகையில், 11 ஆயிரம் தரிசு வயல் நிலங்களில் மீண்டும் பயிர்ச்செய்கை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, விவசாய இராஜாங்க அமைச்ச்ர் மொஹான் பீ. டி. சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக குறித்த தரிசு வயல் நிலத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இதற்காக 420 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


19 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் பரிந்துரை அறிக்கை இரண்டு வாரங்களில் அமைச்சரவையில்...
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் - வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!
அனைத்துப் பாடசாலைகளுக்கும் முப்பது வீத சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நட...