நோயாளிகளின் எண்ணிக்கை துரிதவேகத்தில் அதிகரித்தால் நாடு மீண்டும் முடக்கப்படலாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Tuesday, November 16th, 2021

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை துரிதவேகத்தில் அதிகரித்தால் நாடு மீண்டும் முடக்கப்படலாம் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இன்னுமொரு முடக்கலை நிராகரிக்க முடியாது என துறைசார் அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சில நாடுகள் முடக்கல் நிலையை அறிவித்துள்ளதை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுமக்களும் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts: