ஜனவரிமுதல் புதிய பொருளாதார வேலைத்திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Thursday, December 7th, 2023

அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  இடம்பெற்ற அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பண்டைய முறைமைகளில் செயற்படுவதன் ஊடாக நாட்டிற்கு எதிர்காலம் கிடையாது எனவும், கடந்த சில வருடங்களில் ஒரு தேசம் என்ற வகையில் நாம் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை எதிர்கால சந்ததியினர் வரை கொண்டு செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

எனவே, புதிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழிகள் இல்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே 18 மாதங்களில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியான முறையில் நிர்வகிக்காவிட்டால் மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும். அதற்காக தற்போது நிலையான பொருளாதாரத்தை டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கொண்டு செல்ல புதிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் அதில் நவீன பொருளாதார முறைமைகளை பயன்படுத்த வேண்டும்

இதேவேளை இந்த மாத நடுப்பகுதியில், நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிக்கவுள்ளது.

ஆனால், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த புதிய பொருளாதார முறைகளின்படி முன்னேற வேண்டும்.

அவ்வாறு இல்லாமல், பழைய பொருளாதார முறைகளை அமுல்படுத்தினால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையா...
கரவெட்டி தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களது தகவல்களை தருமாறு பணிப்பாளர் கேதீஸ்வரன் வசர வேண்டுகோள்...
இம்மாத இறுதிக்குள் முன்பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை!