மருந்துகளுக்கான கட்டணம் செலுத்தல் தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன – நிதி அமைச்சின் அத்திகாரிகளுடன் கலந்துரையாடல் !

Friday, October 27th, 2023

மருந்துகளுக்கான கட்டணம் செலுத்தல் தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன மற்றும் நிதி அமைச்சின் அத்திகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் பல்வேறு விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகையை செலுத்துவதற்கான நிதியினை விசேட அமைச்சரவை அனுமதியின் கீழ் ஒதுக்குவதற்கு தேசிய வரவு செலவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அடுத்த வாரம் சமர்ப்பிக்குமாறு வரவு செலவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருந்துகளை கொள்வனவு செய்தல் மற்றும் நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்துதல் போன்ற அத்தியாவசிய சுகாதார செலவுகளுக்கு எவ்வித தாமதமும் இன்றி பணம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போலி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி மருந்துகளை இறக்குமதி செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts: