தற்காலிகமாக தளத்தர்ப்பட்ட ஊரடங்கு சட்டம்..!

Friday, March 27th, 2020

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் முதலான மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு காவல்துறை ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளத்தர்ப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிற்பகல் 2 மணிக்கு அந்த மாவட்டங்களில் ஊடங்கு சட்டம் மீள அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில் இவ்வாறு அமுலாக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றினால் அதிகம் பாதிக்கப்படும் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்துவருகின்றது

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமுலாக்கப்பட்டுள்ள உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், குறித்த பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நேற்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.

அந்த பிரதேசங்களில், எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பின்னர் காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம், பிற்பகல் 2 மணிக்கு அந்தப் பகுதிகளில் மீள அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு அழைத்துச் செல்வதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் எந்தவொரு மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர்களுக்கும், சிறு தேயிலை தோட்டம் மற்றும் ஏற்றுமதி பயிர் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அவர்களது பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts: