சுற்று நிருபங்களை கருத்திற் கொள்ளாது நிவாரணங்கள் வழங்குங்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல!

Wednesday, May 31st, 2017

சுற்று நிருபங்களை கருத்திற் கொள்ளாது நிவாரணங்களை வழங்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்காக சுற்று நிருபம் ஊடாக, அதிகாரிகளுக்கு அறிவித்தல் விடுக்குமாறும் அவர் கோரியுள்ளார். புஞ்சிபொரளை வஜிராராம மத்திய பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் போது சுற்று நிருபங்களுக்கு வரையறை செய்யாது கடமையாற்றுமாறு சுற்றுநிருபம் ஒன்றின் மூலம் அறிக்க வேண்டும்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கையை விடுக்கின்றோம்.12 மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக நான்கு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் போது சுற்று நிருபங்களுக்கு புறம்பாக நிவாரணங்களை வழங்க அதிகாரிகள் அஞ்சுகின்றனர். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் கடமையாற்றிய அரச அதிகாரிகள் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

நிவாரணப் பணிகளின் போது பணம் செலவிட்ட முறைமை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.சில அதிகாரிகள் எவ்வித குற்றச்சாட்டும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டனர்.அரச அதிகாரிகள், கொள்ளையர்கள் என காண்பிக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.சுற்று நிருபங்களுக்கு அஞ்சி செயற்பட வேண்டாம் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கினாலும், உண்மையில் அவ்வாறு கடமையாற்ற அதிகாரிகள் அஞ்சுகின்றார்கள் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts:


மக்களின் கோரிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் நிவர்த்தி செய்யப்படுகின்றது – ஊர்காவற...
ஜனாதிபதி கோட்டபய இந்த ஆட்சிக் காலத்திலேயே ரிஷாட் பதியுதீனுக்கு தண்டனை – அமைச்சர் மஹிந்தானந்த அறிவிப்...
பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது தொடர்பில் பிரித்தானியாவுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்...