நாட்டின் அபிவிருத்தியை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – அமைச்சர் திலக் மாரப்பன !

Saturday, August 19th, 2017

நாட்டின் நற்பெயரையும், நன்மதிப்பையும் சர்வதேச மட்டத்தில் பிரபல்யப்படுத்தும் நோக்கில் தூதுவராலயம், உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் கன்சியூலர் காரியாலயங்களை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

நேற்று அமைச்சில் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டவேளையில் அமைச்சர் திலக் மாரப்பன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் நிதி உதவிகளை பெற்று நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை வலுப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதும் தமது எதிர்ப்பார்ப்பு என்று அவர் மேலும் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களில் காணப்படும் பௌதீக மற்றும் மனிதவள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

Related posts:

மாகாண சுகாதார பரிந்துரைகளுக்கு அமையவே நடைமுறைகளை தளர்த்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் – ஜனாதிபதி...
எதிர்வரும் திங்கள்முதல் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கிளினிக் சேவைகள் புதிய இடத்தில் - பணிப்பாளர்...
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் தகவல்களை தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்...