மாகாண சுகாதார பரிந்துரைகளுக்கு அமையவே நடைமுறைகளை தளர்த்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் – ஜனாதிபதி!

Friday, April 17th, 2020

மாகாண சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு மாவட்டங்கள் மீதான ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்து முடிவெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார் என ஜனாதிபதி செயலக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் அனைத்து மாகாண வைத்திய பணிப்பாளர்கள் உட்பட சுகாதார துறை அதிகாரிகள் தங்கள் மாகாண நிலைமைகள் தொடர்பில் இதன் போது ஜனாதிபதியிடம் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

மாகாணங்களில் நிலவும் நிலைமையை கருத்திற் கொண்டு தொழில்துறை நிறுவனங்கள், விவசாய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்பு போலவே செயற்படுத்தவே அனுமதிக்கப்படும்.

இதற்கான பரிந்துரைகளை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் மூலம் விரைவில் சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார சேவை இயக்குனர்களிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.

அன்றாட ஊதியம் பெறுபவர்களின் வாழ்வாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துவதே முக்கிய நோக்கம் என்று இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் 19 மாவட்டங்களுக்காக நாளையதினம் காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அன்றைய தினமே மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

Related posts: