சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம்!

Friday, August 20th, 2021

சுகாதாரத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக சுகாதார பிரிவினர் அதிகளவில் தொற்றுக்கு உள்ளாகும் அவதானம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக அவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாவது தடுப்பூசியை பெற்று 5 மாதங்களின் பின்னர் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது

இதேவேளை

நாட்டில் இதுவரை  ஒரு கோடி 29 இலட்சத்து 19 ஆயிரத்து 193 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், 51 இலட்சத்து 24 ஆயிரத்து 185 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: