யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
Monday, October 17th, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(18) காலை-08.30 மணி முதல் பிற்பகல்- 05 மணி வரை மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி, துன்னாலை, தாமரைக் குளத்தடி, இந்திர அம்மன் கோவிலடி, சாமியின் அரசடி, சம்மந்தர் கடை, கிழவித் தோட்டம், யாக்கரு கப்பூது, கலிகை, வலிக் கந்தோட்டம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
மாகாணங்களுக்குள் தொடருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை!
DO ஆசிரியர்கள் ஆசிரியர் நியமனத்தை நிரந்தரமாக்கக் கோரி போராடம்!
பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 26 பேர் பலி!
|
|
|


