நிர்மாண பொருட்களின் விலை குறைப்பில் அதிகாரிகள் அசமந்தம் – கட்டுமான சங்கம் குற்றச்சாட்டு!

Saturday, July 15th, 2023

கட்டட நிர்மாணப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அதிகாரிகள் அசமந்தப்போக்கில் செயற்படுவதாக தேசிய கட்டுமாண சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

அதிகாரிகள் அறிவிக்கும் சதவீதத்தினால் கட்டட நிர்மாணப் பொருட்களின் விலைகள் குறையவில்லை, இத்துறையை புத்துயிர் பெற, பாசாங்கு செய்யாமல் விலைகளை குறைக்க வேண்டும் எனவும் தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர வலியுறுத்தியுள்ளார்.

சிமெந்து பாக்கெட் விலைகளை 500 மற்றும் 300 ரூபாவால் குறைப்பதாக இரண்டு தடவைகள் அதிகாரிகள் கூறிய போதிலும் சிமெந்து பாக்கெட் ஒன்றின் விலை உண்மையிலேயே 150 ரூபாவினால் குறைக்கப்பட்டதாகவும் சிமெந்து பாக்கெட் ஒன்றின் விலை 2000 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டுமெனவும் சுபுன் அபேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இரும்பின் விலை 50 வீதத்தால் குறைக்கப்படும் என அதிகாரிகளும் அதிகாரத்தில் உள்ளவர்களும் அறிவித்துள்ள போதும், 140,000 ரூபாவாக இருந்த ஒரு தொன் கம்பியை 580,000 ரூபாவாக உயர்த்தி தற்போதைக்கு அதன் விலையை 380,000 ரூபாயாக குறைப்பது 50 வீத குறைப்பு அல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தற்போதைய கம்பிகளின் விலையுடன் ஒப்பிடுகையில் 34.4 வீத குறைப்பும் 271 வீத அதிகரிப்பும் காணப்படுவதாகவும் சுபுன் அபேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: