ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று: கொழும்பு மத்திய தபால் பரிமாறல் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
Thursday, November 5th, 2020
கொரோனா தொற்றின் காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு – 10 டி.ஆர் விஜயரத்ன மாவத்தையில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாறல் சேவையில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானவராக உறுதி செய்யப்பட்டதினால் அதன் அனைத்து நடவடிக்கைகளும், பொது மக்கள் அலுவல்களும் மீண்டும் அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக இடைநிறத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார பிரிவின் ஆலோசனைக்கு அமைய இந்த சுற்றாடல் பகுதியில் கிருமி தொற்று நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் கடமைகள் ஆரம்பிக்கப்படும் தினம் தொடர்பாக அறிவிக்கப்படும் என்று தபால் மா அதிபர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிவிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் புதிய வரைபடம்: ஜூன் மாதமளவில் பொதுமக்கள் கொள்வனவுக்கு!
பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்க வெற்றிடங்களை நிரப்புவதற...
மத்திய கிழக்கில் மூண்டது போர் - ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து தாக்குதல்!
|
|
|


