எதிர்வரும் திங்கள்முதல் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கிளினிக் சேவைகள் புதிய இடத்தில் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு!
Saturday, October 24th, 2020
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் இனிமேல் புதிய இடத்தில் இயங்கவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் விக்டோரியா வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய கட்டடத் தொகுதியில் மருத்துவ கிளினிக் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நடைபெறும் என்றும் ஏனைய கிளினிக்குகள் அனைத்தும் பழைய இடங்களிலேயே இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மருத்துவ கிளினிக்குக்கு வரும் பொதுமக்கள் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நேரடியாக விக்டோரியா வீதியினூடாக வைத்தியசாலைக்கு எதிர்ப்புறமாக இருக்கின்ற கட்டிட தொகுதிக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொதுமக்கள் பார்வைக்குவரும் கொழும்பு துறைமுகம்!
மலையக மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொள்வதை ஏற்கிறேன் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
சீனாவுடனான தமது பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் - ...
|
|
|


