புதிய அரசியலமைப்பு தொடர்பான இறுதி வரைபு, வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Wednesday, November 10th, 2021

இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பான இறுதி வரைபு, இந்த வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் அனுர குமார திசாநாயக்க, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இந்த வரைபை இறுதியாக்குவதற்கான செயற்பாடுகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்கான குழுவின் தலைவராக, ஜனாதிபதி சட்டத்தரணி, ரொமேஸ் டி சில்வா செயற்படுகிறார்.

அவரின் கீழ், ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹரா டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்த்தன, ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மானப்பெரும, பேராசிரியர் நசீமா கமர்தீன், கலாநிதி ஏ சர்வேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி சமந்த ரத்வத்த, பேராசிரியா் வசந்த செனவிரட்ன, அப்துல் வாஹிட் அப்துல் சலாம், பேராசியர் ஜி.எச்.பீரிஸ் ஆகியோர் உறுப்பினா்களாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: