தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 626 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், மேல் மாகாணத்திற்கு நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் 13 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல் மாகாணத்துக்கு பிரவேசித்த 302 வாகனங்களில் பயணித்த 580 பேர் சோதனைச்சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!
புதிய உள்ளுராட்சி மன்றங்களை ஸ்தாபிக்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு!
ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்!
|
|