கல்வித்துறையில் மாஃபியாக்களை ஒழிப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் அகில விராஜ்!

Monday, October 22nd, 2018

கல்விதுறை ஒரு வியாபாரமாக உருவெடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடையபரப்பில் மாற்றங்களை செய்ய பரீட்சைகள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பிரத்தியேக வகுப்புக்களுக்கு பொருந்துகின்ற வகையில் அல்லாமல் சாதாரண சிந்தனை ஆற்றலுக்கு பொருத்தமான வகையில் திருத்தங்களை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சைக்காக மாணவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். விரைவில் இந்த முறைமை ஒழிக்கப்படும்.

புலமை பரிசில் பரீட்சைக்கும், புலமை பரிசில் கொடுப்பனவுகளுக்கும் முன்பிருந்த உள்நுழைவு பரீட்சை போன்ற ஒரு முறைமை கொண்டுவந்து போட்டியை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சாதாரண தரம், உயர்தரம் மற்றும் புலமை பரிசில் பரீட்சைக்கான பாடப்பரப்புக்கள் மேலும் பிரத்தியேக வகுப்புக்கு வடிவமைக்க வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் யாருக்கும் சோரம் போகாத வகையில் இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கல்வி முறையில் தலைதூக்கியுள்ள மாஃபியாக்களை முடிந்தளவு விரைவில் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: