மலேசியாவில் ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு!

Thursday, December 15th, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசிய அரசாங்கத்தின் விசேட உத்தியோக பூர்வ அழைப்பை ஏற்று மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கோலாலம்பூர் நகர் சென்றடைந்த ஜனாதிபதியை மலேசிய அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டு மனிதவள அபிவிருத்தி அமைச்சர் தத்தோ ஸ்ரீ றிச்சட் றியோட் அனக் ஜாம் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதை அணிவகுப்புடன் அமோக வரவேற்பை அளித்தனர்.

இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு ஜனாதிபதியை வரவேற்பதற்காக மலேசிய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அத்தோடு விமானநிலையத்தின் நுழைவாயில் பகுதியில் தேசியக்கொடி உள்ளிட்டவற்றினால் அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

d68fea2e765cc28f42025fa3dad5696d_XL

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் இடையிலான சந்திப்பு நட்புறவு ரீதியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு விமான நிலையத்தின் விசேட விருந்தினருக்கான அறையில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் மலேசியாவுக்குமிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்மடுத்தி புதிய தொடர்புகளை கட்டியெழுப்புவதுமே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும். இலங்கை மலேசிய இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பமாகி 60 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் வைபவம் ஒன்று நடைபெறவுள்ளது. இதற்கமைவாக நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் உணவு ஏற்பாட்டு நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

CztOCxBUsAAs-lr

இந்த மூன்று நாள் விஜயத்தில் ஜனாதிபதி மலேசிய மன்னர் சுல்தான் முகமட் மற்றும் பிரதமர் நஜீப்பிந்துன் அப்துல் ரசாத்தையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Related posts: