நுரைச்சோலை அனல்மின் நிலைய மின் பிறப்பாக்கியில் கோளாறு!
Monday, April 17th, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(17) அதிகாலை முதல் திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள முதலாவது மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இவ்வாறு மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதனால் இரத்தினபுரி, மத்துகம, கொட்டுகொட, மாத்தறை, அத்துருகிரிய, சப்புகஸ்கந்த, கொஸ்கம உட்பட பல பிரதேசங்களுக்கு இவ்வாறு மின்சாரம் துன்டிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் தற்போது நிலைமை சீராக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கடந்த 40 நாட்களில் 8697 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!
தொலைபேசி அழைப்பை ஏற்காத இலங்கை தூதர் திரும்ப அழைப்பு!
ஊடகர் பாரதிக்கு சிறப்பு மலர் வெளியீடு -சாதிக்கும் ஊடகர்களுக்கு"பாரதி" விருது - ஓராண்டு நின...
|
|
|


