கடந்த 40 நாட்களில் 8697 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!

Thursday, February 9th, 2017

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 8697 பேர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களில் 50 வீதமானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர குறிப்பிட்டார்.

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுற்றாடலை சுத்தம் செய்வதற்காக குறிப்பிட்ட காலத்தை ஒதுக்கி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், ஆனால் பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் டெங்கு நோய் பரவுதல் தொடர்பில் விசேட விழிப்புணர்வு தேவைப்படுவதாகவும் டொக்டர் பிரசீலா சமரவீர கூறினார்.

04-1446609960-dengu567

Related posts:

பி.சி.ஆர் சோதனை குறைக்கப்படாது - சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவி...
வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையை கட்டியெழுப்புவதற்கு சிறந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – யாழ்ப்ப...
மருத்துவபீட மாணவன் மரணம் - முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரு...