அதிக அரச விடுமுறைகள் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைவு!

Monday, December 26th, 2022

நத்தார் தினத்தை முன்னிட்டு இன்று விசேட அரச விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அரச பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகில் அரச விடுமுறைகள் அதிகம் வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

190 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தை மியன்மார் பெற்றுள்ளதுடன், அந்தநாட்டில் நடப்பாண்டில் மாத்திரம் 32 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

5 முதல் 8 நாட்கள் தொடர்ச்சியாகவும் அங்கு விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ள நேபாளம் இரண்டாம் இடத்திலும், 26 அரச விடுமுறைகள் வழங்கப்பட்ட ஈரான் 3 ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை இந்த பட்டியலில் 4 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தவருடத்தில் இதுவரை 25 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

மலேசியா, பங்களாதேஸ், எகிப்து, கம்போடியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: