காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பியுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு சுற்றாடல் அமைச்சர் பணிப்புரை!

Wednesday, December 1st, 2021

மக்கள்தொகை அதிகமுள்ள நகர்ப்புறங்களில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் அமைச்சர் சுற்றுச்சூழல் சபை அறிவுறுத்தியுள்ளார்.

சுற்றாடல் அமைச்சின் புதிய தேசிய சுற்றாடல் சபையின் 14 ஆவது அமர்வு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட வனஸ்பதி உறுவாரிகே வன்னியலெத்தோ உட்பட சுற்றாடல் சபையின் 25 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது நகர்ப்புறங்களில் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்து கருத்து தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, மக்கள் செறிந்து வாழும் நகர்ப்புறங்களில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: