சீன ஆராய்ச்சி கப்பலை இலங்கைக்குள் அனுமதிப்பது தொடர்பில், இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, September 26th, 2023

சீன ஆராய்ச்சி கப்பலான ஷி யான் 6 இனை இலங்கைக்குள் அனுமதிப்பது தொடர்பில், இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் முக்கியமானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்தியா நீண்ட காலமாக தமது கவலைகளை வெளிப்படுத்தி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீன ஆராய்ச்சி கப்பலான ஷி யான் 6 கப்பலை இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்க இந்தியா உடன்படுமானால், அது பிரச்சினையாக அமையாது.

எனினும், அதற்கு இந்தியா மறுப்புத் தெரிவிக்கும் போது, பிரச்சினைகள் ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை தமது வலையத்தை எப்போதும் அமைதியாக வைத்திருப்பதையே விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஷி யான் 6 என்ற ஆராய்ச்சிக் கப்பல் அடுத்த மாதம் இலங்கையின் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, குறித்த கப்பலின் வருகைக்கு, அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட், கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: