ஐ நாவில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் – இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே நம்பிக்கை !

Tuesday, March 2nd, 2021

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவ்விடயத்தை தெரிவித்தள்ள அவர்  தொடர்ந்தும் கூறுகையில் –

“இந்தியா இலங்கையின் ஒரு சிறந்த நட்பு நாடு. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானம் செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அமர்வுக்கு முன்னர் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே எவ்வாறாயினும், வாக்களிப்பதைத் தவிர்ப்பது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கு தடையாக இருக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: