புகைப்பொருள் பாவனை 40சதவீதத்தினால் குறைவு – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Monday, January 2nd, 2017

சிகரெட் பாவனை 40 சதவீதம் குறைவடைந்திருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வரி அதிகரிப்பின் காரணமாக தற்போது சிகரெட் பாவனை 40 சதவீதமாக குறைவடைந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார் உலகம் இன்று எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை தொற்றா நோயாகும். அரசாங்கம் சீனி கலந்த குளிர்பானங்களுக்கான வர்ண இலச்சினை முறையொன்றினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

சுவையூட்டிய இனிப்புப் பண்டங்கள், உப்பு உள்ளிட்டவற்றில் உப்பு போன்றவற்றின் அளவை வெளிப்படுத்தும் வர்ண இலச்சினையை அறிமுகப்படுத்துவதற்கும் இந்த வருடம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தொற்றா நோயைக் கட்டுப்படுத்துவது இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் மேலும் தெரிவித்தார்.

02f763468429123fe3e832eea377ea05_XL

Related posts: