விரைவில் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் மீளாய்வு!

Saturday, August 13th, 2016

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான சட்ட திருத்தங்கள் மற்றும் விசேட ஏற்பாடுகள் தொடர்பில் குறித்த திருத்தத்தில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

குறித்த பரிந்துரைகள் தொடர்பில் ஏற்கனவே சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான துணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு சட்மூலமானது பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அவர்களின் தேவைகளை கண்டறிந்து அரசு மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் பல கடமை பொறுப்புக்களை விதந்துரைக்கின்றது.

அத்துடன் தென்னாபிரிக்க அரிசியலமைப்பின் 198 ஆவது சரத்தின்படி தேசிய பாதுகாப்பு தொடர்பாக துணைக்குழுக்களின் அவசியம் தொடர்பிலும் தனி நபர்கள் அரசுக்கு ஆற்றவேண்டிய கடமைப்பொறுப்புக்களையும் தெளிவாக விளக்குகின்றது.  தனி மனிதர்கள் தேசமாக சமத்துவத்தோடு வாழ்வதற்காகவும், சுமுகமான வாழ்வுக்கான தேவைகளையும் வரையறுக்கின்றது.

இது சர்வதேச சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாராளுமன்ற துணைக்குழு மற்றும் தேசிய அதிகாரத்துடனான பரப்புகளை கூறுகின்றது. மேலும் இலங்கை மனித உரிமைகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 4 ஆம் சரத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்டையில் தேசிய பாதுகாப்பிற்கான தேவையினை அவசியம் புர்த்திசெய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts: