கட்டாக்காலிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பணிப்பு!

Sunday, December 24th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் கட்டாக்காலிகளாக அலையும் மாடு ஆடு மற்றும் நாய்கள் போன்றவற்றுடன் மோதிக் காயம் மற்றும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன என சுகாதாரத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளதால் சாலைகளில் கட்டாக்காலியாக அலையும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

நடப்பு வருடத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் வாகனங்களில் பயணித்த 979 பேர் கால்நடைகளுடன் மோதி சாலை விபத்துக்களால் காயமடைந்தனர் எனவும் 47 பேர் உயிரிழந்தனர் எனவும் மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே அதிகாரிகள் தத்தமது பிரதேசங்களில் கட்டாக்காலிகளாக சாலைகளில் திரிகின்ற மாடு ஆடு மற்றும் நாய்களைப் பொதுமக்களுடன் இணைந்து கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாவட்டச் செயலர் அறிவித்துள்ளார்.

Related posts: